குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம் pt desk

சென்னை | ஒவ்வொரு மழையிலும் பாதிக்கப்படும் கொரட்டூர் - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்!

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் தனித்தீவு போல காட்சி அளிக்கிறது.. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7 வார்டு 84 மட்டும் 87 கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் அடங்கிய பகுதிகளாகும். கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்தில் வீட்டுமனைகள் விற்கப்படும் போதே, தெருக்கள் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் என அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வீடுகள் விற்கப்பட்டுன. ஆனால், கொரட்டூருக்கு மேலே உள்ள பகுதிகளான வார்டு 80, 81, 82, 85, 86 ஆகிய பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர், கால்வாயில் வரக்கூடிய கழிவுநீர் எல்லாம் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை வந்தடைகிறது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம் pt desk

இதனால் ஒவ்வொரு மழையின் போதும் வேறு பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால் கால்வாய் சரியான முறையில் திட்டமிடாமல் கட்டி முடிக்கப்பட்டதால் அதன் வழியாக மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் கடந்த ஆண்டு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு நிழற் சாலையில் இரண்டு மழைநீர் உந்து நிலையம் கட்டப்பட்டு 100 எச்பி மோட்டார் வைக்கப்பட்டது அதுவும் சரியாக பயன் அளிக்காத காரணத்தினால், தற்போது டிராக்டர் வண்டியில் மோட்டார் வைத்து மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்
நொடிக்கு நொடி சீறிய கடல்..! பிஞ்சு குழந்தையுடன் வந்து அலட்சிய பதில் சொன்ன தந்தை!

பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதால் மழைநீர் கால்வாயில் நிரம்பி தெருவெங்கும் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு மழைக்கும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். கொரட்டூர் வடக்கு நிழற்சாலைக்கு உட்பட்ட 25 முதல் 29 வரையிலான ஐந்து தெருக்களில் வெள்ள நீர் மூழ்கடித்து தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் நுழைந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம் pt desk
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம்
“சாதியைத்தான் சீமான் பேசுகிறார்.. தான் சைமன்.. என சொல்வாரா?” நாதகவில் விலகிய நிர்வாகிகள் ஆதங்கம்!

தேங்கியிருக்கும் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு குப்பை கழிவுகளும் வீடுகளுக்குள் நுழைவதாக வேதனை தெரிவித்தனர். அவசர தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் தவித்து வரும் கொரட்டூர் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com