கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர கிராம மக்களுக்கு 19ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 640 கன அடியிலிருந்து 4 ஆயிரத்து 640 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருதி அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதிகளான பூதிநத்தம், பேரண்டபள்ளி, கோபசந்திரம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப் பாலங்களைக் கடக்க வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
.