\
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை
Published on

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து நேற்று மாலை முதல் அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்தனர்.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 5 மணி முதல் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாகக் காணப்பட் டது. திடீரென அதிகரித்த தண்ணீரால் குற்றாலம் மெயின் அருவியில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டத் தொடங்கியது. இதனால் அங்கும் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com