\
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் நீர்பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர கிராம மக்களுக்கு 15-ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 3,680 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதி அதேஅளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளான பூதிநத்தம், பேரண்டபள்ளி, கோபசந்திரம் உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப் பாலங்களைக் கடக்க வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com