\
வெள்ளத்தில் சிதைந்த தரைப்பாலம்: பாதியில் சிக்கிய பஸ்

வெள்ளத்தில் சிதைந்த தரைப்பாலம்: பாதியில் சிக்கிய பஸ்

வெள்ளத்தில் சிதைந்த தரைப்பாலம்: பாதியில் சிக்கிய பஸ்
Published on

அரியலூர் மாவட்டம் செந்துறை - ஆர்.எஸ். மாத்தூர் சாலையிலுள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்சென்றதில் அரசு பேருந்து சிக்கிக்கொண்டது.

நின்னியூர் ஓடை மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் நடுப் பகுதி இரவு பெய்த கனமழையில் அடித்து செல்லப்பட்டது. அப்போது 30 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பாலத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் திணறியது. இதைத் தொடர்ந்து பயணிகள் மீட்கப்பட்டு, செந்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து அனுப்பப்பட்டனர். பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்காலிக பாலம் தூண்டிக்கப்பட்டதால் செந்துறை - பென்னாடம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com