திருமூர்த்தி மலை பகுதியில் வெள்ளப் பெருக்கு
திருமூர்த்தி மலை பகுதியில் வெள்ளப் பெருக்குpt desk

தொடர் மழை எதிரொலி: திருமூர்த்தி மலை பகுதியில் வெள்ளப் பெருக்கு – பக்தர்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோயிலை சூழ்ந்து வெள்ளநீர் செல்கிறது.
Published on

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான திருமூர்த்தி மலையில், மும்மூர்த்திகள் கோயில், அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி ஆகியவை உள்ளன.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயில் அருகே செல்லும் தோனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் பிரகாரப் பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

பக்தர்களுக்கு எச்சரிக்கை
பக்தர்களுக்கு எச்சரிக்கை pt desk

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி பகுதிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், குருமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தானபாறை ஆகிய பகுதிகள் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து பக்தர்கள் கோயில் பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கோயில் பிரகாரத்தைச் சுற்றி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சூழ்ந்து செல்கிறது.

திருமூர்த்தி மலை பகுதியில் வெள்ளப் பெருக்கு
கனமழையின் எதிரொலி வேளச்சேரி நூறடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு மீண்டும் அதிகரிக்கக் கூடும் என்பதால் கோயில் நிர்வாகத்தினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கோயில் பகுதியில் இரவு நேரத்தில் பக்தர்கள் யாரும் தங்கவோ, ஆற்றில் இறங்கவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அமராவதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இதேபோல திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 36,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com