நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மூழ்கிய அணைப்பாளையம் தரைப்பாலம்

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்குபுதிய தலைமுறை

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

கனமழையால் கோவை, நீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூரின் மையப்பகுதி வழியாக நொய்யல் ஆறு கடந்து செல்லும் நிலையில், கலோஜ் ரோடு மற்றும் மங்கலம் ரோடு இரண்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதிகளவு நீர் செல்வதால், பாதுகாப்பு கருதி தரைப்பாலம் வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போலீசார் தரைப்பாலத்திற்கு செல்லும் பாதைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக நொய்யல் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com