குற்றாலத்தில் ஆக்ரோஷ வெள்ளப்பெருக்கு... உருக்குலைந்த அருவிப்பகுதி

குற்றாலத்தில் ஆக்ரோஷ வெள்ளப்பெருக்கு... உருக்குலைந்த அருவிப்பகுதி
குற்றாலத்தில் ஆக்ரோஷ வெள்ளப்பெருக்கு... உருக்குலைந்த அருவிப்பகுதி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் தொடா்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை மூழ்கடித்து முதலாவது நடைப்பாலம் வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
 
செம்மண் நிறத்துடன், சிறிய அளவிலான கற்களுடன் சோ்ந்து காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக பாய்ந்தது. இதனால் பெண்கள் உடைமாற்றும் அறையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. அருவியை சுற்றியிருந்த தடுப்புக் கம்பிகளும் உடைந்து காணப்படுகிறது. மெயின் அருவி நடைபாதையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆற்று மணல் குவியல் குவியலாக கிடக்கின்றன.
 
 
பழைய குற்றாலம் அருவிக்கு அருகிலேயே செல்ல முடியாத வகையில் நடைபாதை மற்றும் படிகள் வரையிலும் தண்ணா் சீறிப்பாய்கிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளும் தெரியாத அளவில் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.
 
கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தடை நீடிப்பதால் குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீரை வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்கின்றனா்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com