கண்மாய் நிரம்பி வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

கண்மாய் நிரம்பி வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

கண்மாய் நிரம்பி வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
Published on

மதுரை மாவட்டம் கல்லிக்குடியை அடுத்த வடக்கம்பட்டியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பகுதிகளிலுள்ள கண்மாய்கள் நிரம்பி, தெருக்களில் கண்மாய் நீர் செல்கின்றது.

வடக்கம்பட்டி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்னர், இதே போன்று மழைநீர் சாலையில் பெருக்கெடுத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். கண்மாய் தண்ணீர் பெருத்து ஓடுவதற்கு வேறு வழியில்லாத காரணத்தால் குடியிருப்புகளுக்கு மத்தியில் பெருக்கெடுத்தது. மழை இல்லாமல் வறட்சியின் வேதனைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு இந்த மழை பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் நீந்தியும், குதித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com