விழுப்புரம்: மூழ்கிய தரைப்பாலம்.. துண்டிக்கப்பட்ட கிராமம்.!

விழுப்புரம்: மூழ்கிய தரைப்பாலம்.. துண்டிக்கப்பட்ட கிராமம்.!
விழுப்புரம்: மூழ்கிய தரைப்பாலம்.. துண்டிக்கப்பட்ட கிராமம்.!

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட மண்டகப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த கிராமம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட மண்டகப்பட்டு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் போக்குவரத்துக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் செய்வதறியாது உள்ளனர் கிராம மக்கள்.

இது குறித்து தெரிவித்துள்ள அக்கிராம மக்கள், திண்டிவனம் மரக்காணத்தில் இருந்து எங்கள் ஊருக்கு செல்லும் பாதைக்கு குறுக்கே ஓங்கூர் ஆறு ஓடுகிறது. இந்த ஆறு மழைக் காலங்களில் ஒவ்வொரு முறையும் அதன் கொள்ளளவை அதிகரித்து ஓடுவது வழக்கம். அப்படி ஓடும்போது கந்தாடு ஊராட்சியில் இருந்து மண்டகப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் மூழ்கிவிடுகிறது. மேலும் ஆற்று தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுறது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வழக்கமாக மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு கூட குழந்தைகள் போக முடியாத சூழ்நிலை உண்டாகிறது. மழைக்காலங்களிலும் வழக்கமான எங்களது பணியை செய்ய இந்தப் பகுதியில் எங்களுக்கு என்று ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக பதில் அளித்துள்ல மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் , ''மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்திற்கு முறையான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பகுதியில் ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்'' என்று உறுதியளித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com