ஒரு வாரம் ஆகியும் அம்பேத்கர் நகர் பகுதியில் வடியாத வெள்ளம்: கதறி அழும் மக்கள்

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.

செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதி தாழ்வான பகுதி என்பதால், இங்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. மழை நின்று கிட்டத்தட்ட ஒருவார காலமாகியும் இன்னும் அப்பகுதியில் தண்ணீரானது வடியாமல் இருக்கிறது.

இப்பகுதியில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த குடியிருப்புகளை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வெளியேறுவதற்கான வழிகள் இல்லை. இது இந்த வருடம் மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்னைதான் இருந்து வருகிறது என்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள். இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது,

“இந்தப் பகுதியில் வீடுவாங்கி ஐந்து வருடமாகிறது. இப்படி இங்கு தண்ணீர் நிற்கும் என்று எங்களுக்கு தெரியாது. தெரியாமல் இங்கு வந்துவிட்டோம். மழை பெய்த அன்று அருகில் இருப்பவர்கள் எங்களை மொபைலில் அழைத்து தண்ணீர் வருகிறது பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியதால், நாங்கள் உடமைகள் எதையும் எடுத்துக்கொள்ளாது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் சேதம். மாற்றுத் துணி கூட இல்லை. சொந்த பந்தங்கள் வீட்டிற்கும் செல்ல இயலவில்லை. ஆகவே, வாடகை வீட்டில் தற்காலிகமாக இருக்கிறோம். எங்களுக்கு ஏதாவது செய்து இந்த தண்ணீரை வெளியேற்றுங்கள்” என்று சிரமத்துடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com