தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.பி அணையின் கொள்ளளவான 52 அடியில் 51 அடி நீர்மட்டம் எட்டிய நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பனை கட்டிய நிலையில், அவை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

