கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், சித்தூர் மாவட்டம் அம்மப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார். மேலும் நெடியம், வெளியகரம், சமந்தவாடா தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் வருவாய்த் துறை, தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com