சென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் தற்போது வரை மழைவெள்ளம் வடியாததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
பாலவாயல், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80 குடும்பங்கள் மழையில் சிக்கித் தவித்த நிலையில், புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தால் அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாடியநல்லூர் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்ல வழியில்லாததால் சுமார் 10 நாட்களாக இந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கலக்கம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் இனி வரும்காலங்களிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.