தமிழ்நாடு
தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை
தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்காரணமாக தென்பெண்ணை ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓசூர் அடுத்துள்ள பாதகோட்டாவில் உள்ள தரைப்பாலத்தை கடக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதகோட்டா தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் இருகரையோரங்களிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, கிராம பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதகோட்டா, ராமாபுரம், திருமளகோட்டா உள்ளிட்ட பகுதி மக்கள் பாலத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வழிதடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.