Varaha river
Varaha riverpt desk

தேனி: வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

செய்தியாளர் - அருளானந்தம்

__________

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. அதிலும் நேற்று மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது.

Flood
Floodpt desk

இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் மற்றும் சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆற்றங்கரையோரம் வரிக்கும் மக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வராக நதி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com