மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழை - குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழை - குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழை - குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகரித்த மழையால் நேற்று இரவு குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குறிப்பாக பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. குற்றாலம் பஜார் பகுதி முழுவது வெள்ளம் ஆறாக ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் ஐந்தருவி ஒரே அருவி போல காட்சி அளிக்கிறது.

அதேபோல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அங்கு குளிப்பதற்கு இன்றுவரை அனுமதி வழஙகப்படவில்லை. மேலும் அருவிக்கரை பாலத்திற்கு அருகே தண்ணீர் விழுந்ததால் பாதைக் கற்கள் உடைந்த நிலையில் உள்ளது. கற்களும் மண்ணும் சேறும் சகதியுமாய் நிறைந்து அருவிக்கரையே மாறிப்போய் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com