கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர்!
கடலூர் மாவட்டம் முழுவதும் மிக கனமழையம் கனமழையும் பரவலாக பெய்தது இதனால் பல இடங்களில் நேற்று இரவு தண்ணீர் பெருக்கெடுத்தது. இதன் விளைவாக கடலூர் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவந்திபுரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிந்து ஒடுகிறது.
அதேபோல் கம்மியம் பேட்டை உள்ள தடுப்பனையில் இருந்தும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. கெடிலம் ஆற்றின் அருகே உள்ள பில்லாளி தொட்டி மற்றும் குணமங்கலம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல் தற்போது தண்ணீரில் மூழ்கி நிற்கிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலை ஏற்படுத்துள்ளது. நெல் பயிர் நீர் பயிர் தான் ஆனால் தொடர்ந்து நீர் விவசாய நிலத்தில் நின்றால் ஒட்டுமொத்தமாக அழுகிவிடும் தண்ணீர் எப்போது வெளியேறும் என விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
மழை விட்டால் தண்ணீர் வெளியேற வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால் விவசாய நிலத்தை மழை நீர் சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். விவசாய நிலத்தில் இறங்கி இது விவசாய நிலம் தான் ஆறோ குலமோ இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள் பயிர்களை பிடுங்கி காண்பித்து..