முல்லைப்பெரியாறு அணையில் தேசியகொடியேற்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தேசியகொடியேற்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தேசியகொடியேற்றம்!
Published on

குடியரசு தினத்தை ஒட்டி, முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது. கேரள போலீஸார் சார்பில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். இதற்காக முதல்நாளே அதிகாரிகள் அணையில் முகாமிடுவர். பாதுகாக்கப்பட்ட மற்றும் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக முல்லைப்பெரியாறு அணை உள்ளதால், பணியில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளைத்தவிர கொடியேஎற்றுதல் நிகழ்ச்சியில் யாருக்கும் அனுமதி இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி முல்லைப்பெரியாறு அணையில் தேசிய கொடியேற்றப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறையின் முல்லைப்பெரியாறு அணை உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின் தேசிய கொடியை ஏற்றினார். முல்லைப்பெரியாறு அணையின் முகப்பு தூணில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. உதவி பொறியாளர் குமார் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். அணையின் பாதுகாப்பு பணியில் இருக்கும் கேரள போலீஸார் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com