\
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம்,புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்புள்ளதா‌கவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா கடற்பகுதியில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com