தமிழ்நாடு
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதியான முதியவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதியான முதியவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதியான முதியவர் உட்பட 5 பேர் மீது கொரோனா தொற்று ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என மூன்று வகையாக பகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாராணையில் பாதிக்கப்பட்டவர் ஆந்திராவில் பணியாற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த நிலையில் அவருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் 67 வயது முதியவர் ஆவார்.
இதனால் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு கிருஷ்ணகிரி மாறியது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படுத்திய முதியவர் உட்பட 5 நபர்கள் மீது கொரோனா தொற்று ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.