மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை.. மதுரையில் பரபரப்பு

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது

மதுரை பீப்பிகுளம் உழவர்சந்தை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர் . விசாரணையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 110 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com