குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் மக்‌கள்

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் மக்‌கள்
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் மக்‌கள்

நீலாங்கரையில் உள்ள தாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் கழிவு நீரை குளத்தில் கலந்து விடுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை செங்கேணி அம்மன் கோவில் தெருவில் தாமரை குளம் ஒன்று உள்ளது. மிகப்பழைமையான இந்த குளத்தினை சுற்றி அதிகமான அளவில் குடியிருப்புகளும் உள்ளன. நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தில் சிலர் கழிவு நீர் கலப்பதாலும், குப்பைகளை கொட்டுவதாலும் குளம் மாசடைந்துள்ளது. இதனால் குளத்தில் ஏரளாமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

மீன்களின் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு செத்து மிதக்கும் மீன்களையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தி, அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com