அல்லாடும் மீனவக் குடும்பம் - சிறுநீரகம் செயலிழந்த மகளை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமா அரசு?

அல்லாடும் மீனவக் குடும்பம் - சிறுநீரகம் செயலிழந்த மகளை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமா அரசு?
அல்லாடும் மீனவக் குடும்பம் - சிறுநீரகம் செயலிழந்த மகளை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமா அரசு?
ராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிவருகிறார் இளம்பெண். மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தந்தை முன்வந்துள்ளார். ஆனால் மருத்துவ செலவிற்கு பணம் இன்றி இந்த மீனவ குடும்பம் தவித்து வருவதாகவும், அரசு உதவிக்கரம் நீட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமா - பிரியா தம்பதியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீனவர் சதீஷ்குமார் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே அந்த குடும்பம் வாழ்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 25 வயதான பிரியாவுக்கு திடீரென தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களது சக்திக்கு மீறி பணத்தை செலவு செய்து சதீஷின் குடும்பமே பிரியாவுக்கு சிகிச்சை பாரத்திருக்கிறது. இந் நிலையில் அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து  விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் பிரியாவின் தந்தை ராசு மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவருடைய சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்ததுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தனது மகள் உயிரை காப்பாற்ற தந்தையும், மீனவ குடும்பமும் பரிதவித்து வருகின்றது. 

மேலும் பிரியாவின் மருத்துவ செலவிற்காக வெளிநாடு வாழ் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து 38 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளனர். இவர்களைப் போன்று மற்றவர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மீனவ குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த போதும் மருத்துவ செலவிற்கு பணம் இன்றி பரிதவிக்கும் தந்தையின் கவலையும், ஏக்கத்தையும் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com