\
கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on: 

கடல்சீற்றம் காரணமாக பட்டினப்பாக்கம், ஸ்ரீநிவாசபுரம், அயோத்திகுப்பம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடல்சீற்றம் காரணமாக பட்டினப்பாக்கம், ஸ்ரீநிவாசபுரம், அயோத்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. காற்று பலமாக வீசுவதால் தான் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாகை மாவட்டத்திலும் கடல்சீற்றம் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஸ்பவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அங்கு 2,500க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com