\
65 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று.. தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

65 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று.. தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

65 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று.. தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
Published on

மன்னார் வளைகுடா கடலில் சூரைக்காற்று வீசுவதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வாயிலில், மீன்பிடித் துறைமுக அலுவலகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 475 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com