\
தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய மீனவருக்கு திருமணம்

தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய மீனவருக்கு திருமணம்

தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய மீனவருக்கு திருமணம்
Published on

இலங்கையில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவருக்கு ராமேஸ்வரத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. 
2011ம் ஆண்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த லாங்லட் உள்ளிட்ட 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு 2014ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் நல்லெண்ண நடவடிக்கையாக அந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் லாங்கட் என்பவருக்கு தங்கச்சிமடத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதனால் அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com