\
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மீனவர் மரணம்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மீனவர் மரணம்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மீனவர் மரணம்
Published on

கன்னியாக்குமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, 66 வயது மீனவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அவர் இன்று திடீரென உயிரிழந்தார். கொரோனா தொற்று குறித்த மருத்துவ பரசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. அவரது மகன் சௌதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13 ம் தேதி ஊர் திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com