நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் உயிரிழந்த மீனவர்!

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் உயிரிழந்த மீனவர்!

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் உயிரிழந்த மீனவர்!
Published on

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தங்கவேல். இவர் தேவிப்பட்டிணம் கடற்கரையில் இருந்து தினந்தோறும் சிறிய வல்லத்தில் (சிறிய ரக நாட்டுபடகு) மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை தேவிப்பட்டிணம் கடற்கரையிலிருந்து தனி நபராக வல்லத்தில் (சிறிய ரக நாட்டுபடகு) மீன்பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் கடலில் இறங்கி நண்டு வலையை பயண்படுத்தி நண்டு பிடித்து கொண்டிருந்த போது மீனவர் தங்கவேலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த நாட்டு படகு மீனவர்கள், தங்கவேலு உயிரிழந்து கடலில் மிதப்பதை கண்டதும் உடனடியாக உடலை மீட்டு உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் மெரைன் போலீசார் மீனவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com