உக்கிரத்தை காட்டும் வெயில்.. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பு

உக்கிரத்தை காட்டும் வெயில்.. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பு

உக்கிரத்தை காட்டும் வெயில்.. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பு
Published on

சென்னை அம்பத்தூரில் உள்ள தாமரை குளத்தில் கடும் வெயில் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டலத்திற்கு உட்பட்ட ஒரகடத்தில் உள்ளது தாமரை குளம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு நீர் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அம்பத்தூர் தாமரைகுளத்தையும் வெயில் விட்டு வைக்கவில்லை.

குளத்தில் இருந்த 90 சதவீதம் நீர் முற்றிலுமாக வற்றிவிட்டது. இதனால் அதில் வசித்து வந்த மீன்கள், தவளை, நண்டு, நத்தை உள்ளிட்ட உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. குறிப்பாக ஜிலேபி, கெண்டை, விரால், கொரவை போன்ற ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருக்ககூடிய ஒரு சில மீன்கள் உயிருக்கு போராடி வருகிறது. எனவே செத்து மிதந்துள்ள மீன்களைஅப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதேபோல் உயிருக்கு போராடும் மீன்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து புதிய தலைமுறையிலும் செய்தி வெளியானது. இதனையடுத்து, இறந்து கிடக்கும் மீன்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com