முதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது

முதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது

முதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது
Published on

சென்னை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. 

விஷாகா கமிட்டி 1997 இல் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதனடிப்படையில் டிஜிபி டி கே ராஜேந்திரன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருணாச்சலம், டிஜிபி கனிமொழி, முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் சரஸ்வதி மற்றும் டிஜிபி அலுவலக மூத்த நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நாளை சென்னை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் இந்த கமிட்டியின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுவாக விசாகா கமிட்டி என்பது அலுவலகத்தில் மற்றும் நிறுவனங்களில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை விசாரிப்பதற்கு அமைக்கப்படும். இவை அனைத்து அலுவலகத்திலும், நிறுவனத்திலும் இந்த விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு முன்னால் இருந்த இதே போன்ற கமிட்டி காலாவதி ஆகி விட்டது. இந்நிலையில் புதிய நிர்வாகிகள் கொண்டு கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் முதல் கடை நிலை பெண் போலீசார் வரை உள்ள பெண் காவலர்கள் அனைவரும் இந்த கமிட்டியில் தங்கள் பணியின் போது உயர் அதிகாரிகளால் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com