\
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை !

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை !

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை !
Published on: 

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. வரும் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவுபெறவிருந்த நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அந்தந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டனர். உள்ளூர் தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர். மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com