நாளை 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்

நாளை 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்
நாளை 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதி, இரண்டு கட்டங்களாக, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 9மாவட்டங்களில் 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை காலை ஏழு மணிக்கு தொடங்கவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறவுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு, பணி ஆணை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com