மதுரையைப்போல திருச்சியிலும் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு! முதல்முறை நடந்த போட்டியை காண குவிந்த மக்கள்!

மதுரையை போலவே திருச்சி திருவெறும்பூரில் அருகே உள்ள பெரிய சூரியர் கிரமாத்திலும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
பெரிய சூரியர்
பெரிய சூரியர் முகநூல்

மதுரையை போலவே திருச்சி திருவெறும்பூரில் அருகே உள்ள பெரிய சூரியர் கிரமாத்திலும் பிரம்மாண்டமாக முதல் ஜல்லிக்கட்டு போட்டி கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அருகே உள்ள பெரிய சூரியர் கிரமாத்தில் பொங்கலை முன்னிட்டு தைதிங்கள் இரண்டாம் நாளான மாட்டுபொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவின் காரணமாக முதல் ஜல்லி கட்டி போட்டு இன்று காலை 7 மணி அளவில் வெகு விமர்சையாக துவங்கியது.

இதில் மொத்தம் 750 காளைகள் மற்றும் 550 மாடுபிடி வீரர்கள் என்று பல்வேறு மாவட்டத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முதல் ஜல்லிக்கட்டு காளையாக ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.

மேலும் இப்போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்களும், பார்வையாளர்களும், காளையர்களும் கலந்து கொள்ளவே மதுரையை போலவே திருச்சியிலும் ஜல்லிக்கட்டு மக்கள் ஆரவாரத்தில் களைகட்டியது.

பரிசும்  பாதுகாப்பும்:

இப்போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும் காளையருக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என்று எக்கசக்க பரிசு மழை பொழிய காத்து கிடக்கிறது.

பெரிய சூரியர்
"ஜெயிக்குதோ தோக்குதோ களத்துக்கு அழைத்து வருவது தான் கெத்து!" - அசத்தும் பள்ளி மாணவி அன்னலட்சுமி!

மேலும் அதன்படி சிறந்த காளை உரிமையாளருக்கு இரண்டு சக்கர வாகனம், அதிக காளையை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு வீட்டுமனையும் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதில் கலந்துகொள்ளும் காளைக்கும், காளையர்களுக்கும் அனைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே களத்திலுள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முதலலுதவி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பாதுகாப்பிற்காக 600 போலீசார் வீதம் குவிக்கப்பட்டனர். இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com