உருவாகப் போகும் அந்த புயல்.. தமிழ்நாடா? ஆந்திராவா? கனமழை யாருக்கு?

வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் வரும் 27ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary

வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் 27ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் வரும் 27ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும், பின்னர், மேலும் வலுவடைந்து, புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு MONTHA என பெயரிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com