\
16-ஆவது சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

16-ஆவது சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

16-ஆவது சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
Published on: 

தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. இந்த நிலையில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்குகிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முன்னதாக கு.பிச்சாண்டிக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து, திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com