பட்டாசு ஆலை விபத்து: செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளரை தாக்க முயற்சி

பட்டாசு ஆலை விபத்து: செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளரை தாக்க முயற்சி
பட்டாசு ஆலை விபத்து: செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளரை தாக்க முயற்சி

பட்டாசு ஆலை விபத்து குறித்து செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளரை ஆலை உரிமையாளர் தரப்பினர் தாக்க முயன்றனர்.

சிவகாசி அருகே களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 8 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், விபத்து குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை ஆலை உரிமையாளர் தரப்பை சேர்ந்த சிலர் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தத்துடன் ஒளிப்பதிவு கருவியை பறித்து தாக்க முயற்சித்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். விதி மீறல்கள் குறித்த தகவல்களை நேரலையில் சொன்னபோது அவ்வாறு எந்த விதி மீறல்களும் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com