கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம் - அமமுக நிர்வாகிகள் 2 பேர் வழக்குப்பதிவு

கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம் - அமமுக நிர்வாகிகள் 2 பேர் வழக்குப்பதிவு

கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம் - அமமுக நிர்வாகிகள் 2 பேர் வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரத்தில் அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகர் வழியாக, கடந்த 22 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ இரவு சென்று கொண்டிருந்த போது, அமமுக நிர்வாகிகள் கருப்பசாமி பாண்டியன், கார்த்திக் மற்றும் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com