சென்னை ஐஸ்அவுஸ் காவல்நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாத இடங்களில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை ஐஸ்அவுஸ் காவல்நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். ஐஸ்அவுஸ் காவல்நிலையத்திற்கு அருகே இருந்த ஏராளமான வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.