விருதுநகர் | காரியாப்பட்டி கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து.. மூவர் மரணம்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

விருதுநகரில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்துபுதிய தலைமுறை

செய்தியாளர்: பிரசன்னா

என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பாறை உடைக்கும் பணிக்காக அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களை தவறாக கையாண்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தேவைக்கு அதிகமான வெடிப் பொருட்களை கிடங்கில் குவித்து வைத்ததாலும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து

இந்நிலையில் வெடி விபத்தின் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கர வெடிவிபத்தால் அக்கிராமத்தை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தொலைவு வரை அதிர்வுகள் உணர்ப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த கல்குவாரி முறைகேடாக இயங்கிவருவதகாவும், வெடி விபத்து காரணமாக அருகில் இருக்கும் கிராம மக்களின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து
சென்னை: பழிக்குப் பழியாக அரங்கேறிய கொலை சம்பவம் - தப்பியோடிய 5 பேர் கைது

எத்தனை பேர் மரணம்?

1 கிலோ மீட்டர் தாண்டி மனித உடலானது சிதறிக்கிடந்த நிலையில், தற்போது வரை 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படும் நிலையில், 8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள்

இதனிடையே மீட்புப் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் வெடிக்காத வெடிப்பொருட்கள் சிதறி இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து செயலிழக்க செய்த பின்னரே ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கிருந்த வெடிக்காத 1,200 கிலோ வெடிப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுநர் தலைமறைவான நிலையில், வெடிக்காமல் கிடக்கும் வெடிப்பொருட்களை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கிட்டதட்ட 1 மணி நேரம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே நடந்த அசம்பாவித சம்பவங்களின்போது குவாரி சில தினங்களுக்கு மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டுவிடும் எனக் கூறும் காரியாப்பட்டி கிராம மக்கள், இம்முறை நிரந்தரமாக குவாரியை மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் போராட்டத்தை அடுத்து, குவாரி உரிமையாளரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com