\
Omni bus fire accident
Omni bus fire accidentpt desk

திருச்சி: ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 27 பயணிகள்

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்தப்பினர்.
Published on

செய்தியாளர்: லெனின்.சு

தூத்துக்குடி திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்தொன்று சென்றுள்ளது. மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுனர், பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அதில் பயணம் செய்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளார்.

Fire accident
Fire accidentpt desk

இதையடுத்து சற்று நேரத்தில் தீ மள மளவென பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

Omni bus fire accident
“என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?” - பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி!

இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரையும் மாற்றுப் பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com