மஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மஞ்சள் எஸன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் படுகாய மடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரில், வல்லம்-இலஞ்சி சாலையில் மஞ்சள் பொடியில் இருந்து எசன்ஸ் தயாரிக்கும் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் கொள்கலன்கள் பற்றி எரிந்தன. இதில் பணியில் இருந்த 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக் கு அனுப் பி வைத்தனர். கொள்கலன்கள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் நெருப்பு அதிகம் பரவாத வகையில் தீயணைப்பு வீரர்கள் இயங்கி வருகின்றனர்.