நாமக்கல்: தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

நாமக்கல்: தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

நாமக்கல்: தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. 

நாமக்கல் திருச்சி சாலையில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக கிரீன்ஸ் என்ற பெயரில் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 9 மணிக்கு வழக்கம்போல் கடை ஊழியர்கள்  பணிகளை முடித்து விட்டு கடையை மூடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாக தீ மளமளவென பரவி சூப்பர் மார்க்கெட்டின் அனைத்து பகுதிகளிலும் பற்றி எரிய துவங்கியது. இதனால் அங்கிருந்த அனைத்து வகையான பொருட்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

தீ வேகமாக பரவியதையடுத்து ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த மளிகை பொருட்கள் உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் மேற்கொண்டு விசாரணை வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com