\
சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து

சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து

சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து
Published on

சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து ஏற்பட்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரம்பூரில் ரயில்வே கேரேஜ் செயல்பட்டு வருகிறது. ரயில்கள் பராமரிப்பு பணிகள், பழுது பார்க்கும் பணிகள் இங்குதான் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் நேற்று சரக்கு ரயில் ஒன்றில் ஆயில் டேங்கை சுத்தம் செய்தனர். ஆயில் டேங்கில் வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பணியில் இருந்த ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி அங்கே இருந்த தீயணைப்பு உபகரணங்களை கொண்டு வந்து தீயை அணைத்தனர். ஊழியர்கள் கவனமாக இருந்ததால் வேறு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. தீவிபத்து தொடர்பாக ஐசிஎஃப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com