\
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து
Published on

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

2-வது மாடியில் உள்ள இரைப்பை மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள குளிர்சாதன எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்களும், தீயணைப்பு துறையினருக்கு உதவியதோடு, அவர்களும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த நோயாளி ஒருவர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து முதற்கட்டமாக புகையை வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் பின்னர் தீயை முழுமையாக அணைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com