\
கோயம்பேடு அருகே திடீர் தீ விபத்து

கோயம்பேடு அருகே திடீர் தீ விபத்து

கோயம்பேடு அருகே திடீர் தீ விபத்து
Published on

சென்னை கோயம்பேடு அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 
சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் விவி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மாடிப்பகுதியில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள், தீ அணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே, சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com