மதுரை: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து... விடிய விடிய போராடி தீயை அணைத்த வீரர்கள்

மதுரை: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து... விடிய விடிய போராடி தீயை அணைத்த வீரர்கள்

மதுரை: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து... விடிய விடிய போராடி தீயை அணைத்த வீரர்கள்
Published on

மதுரை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர்.

மதுரை மாவட்டம் பரவையில் லக்ஷ்மி சுப்பையா என்பவருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த சில மாதங்களாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றது. சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் சேதமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com