\
மதுரையில் திரையரங்கில் திடீர் தீ விபத்து..!

மதுரையில் திரையரங்கில் திடீர் தீ விபத்து..!

மதுரையில் திரையரங்கில் திடீர் தீ விபத்து..!
Published on

மேலூரில் உள்ள பிரபல திரையரங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பிரபல கணேஷ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள கணேஷ் பாரடைஷ் திரையரங்கில் கென்னடி கிளப் என்ற திரைப்படம் நண்பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளையின் போது திரையங்கின் கீழ் தளத்தில் உள்ள மின் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தியேட்டர் வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு வேகமாக வெளியேறினர். இதனையடுத்து தியேட்டர் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், தீயின் தாக்கம் அதிகமாகவே உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு விரைவாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீவிபத்தில் அறையில் இருந்த மின் சாதனப் பொருட்கள் மற்றும் பக்கத்தில் இருந்த பஞ்சு இருக்கைகள் தீயில் எரிந்து சேதமாயின. இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com