தமிழ்நாடு
துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்
துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்
மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இருசக்கர வாகனங்கள், மின் மீட்டர்கள் எரிந்து சேதமடைந்தன.
மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே மேலவாசல் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை இந்த தீவிபத்து நேரிட்டது. தகவல் அறிந்து வந்த பெரியார் நிலைய தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், குடியிருப்புகளின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் ,முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.