சென்னை: சினிமா செட் அமைக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: சினிமா செட் அமைக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: சினிமா செட் அமைக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை மதுரவாயலில் படப்பிடிப்பு தளத்திற்கு செட் அமைக்கும் பொருட்கள் வைக்கப்பட்ட குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மதுரவாயல் சாலையில் FLIM DECORS என்ற படப்பிடிப்பு மற்றும் திருமணங்களுக்கு செட் அமைக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில செட் அமைக்க தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென பரவி குடோன் முழுவதும் எரிய தொடங்கியது. குடோனை தொடர்ந்து அருகே உள்ள பழைய கார் உதிரி பாகம் விற்பனையகத்திலும் தீ பரவியது.

தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, பூவிருந்தவல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத கிரேன் எந்திரத்தை கொண்டு வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com